• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி வரம்புக்கு மீறி விசாரணை நடத்தக் கூடாது - உயர் நீதிமன்றம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி வரம்புக்கு மீறி விசாரணை நடத்தக் கூடாது - உயர் நீதிமன்றம்

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை

ஆறுமுக சாமி ஆணையம் 90% விசாரணையை முடித்துள்ளதை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், அப்போலோவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தங்கள் தரப்பு மருத்துவர்களிடம் ஆறுமுக சாமி ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று, அப்போலோ நிர்வாகம் வைத்த கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

    மறைந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்நிலையில் தங்கள் தரப்பு மருத்துவர்களிடம் ஆறுமுக சாமி ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று அப்போலோ நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது.

    ஆறுமுக சாமி ஆணையத்தில் போதிய நிபுணத்துவம் இல்லை என மனுவில் குறை கூறியிருந்த அப்போலா, சுதந்திரமான, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தது.

    ஜெயலலிதா


    இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுக சாமி ஆணையம் 90% விசாரணையை முடித்துள்ளதை சுட்டிக்காட்டி, அப்போலோவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

    தங்கள் வரம்புக்கு மீறி விசாரணை மேற்கொள்ளக் கூடாது என ஆணையத்திற்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரம் பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும். சிகிச்சை சரியா? தவறா? என விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: