வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டால் மறுவாக்குப்பதிவு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

விவிபாட் இயந்திரம்

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும்போது, ஒரு சட்டப்பேரவை தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டும் எண்ணப்படும் என உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

  மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும்போது, ஒரு சட்டப்பேரவை தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டும் எண்ணப்படும் என உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  இதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும், ஒப்புகை சீட்டை எப்படி எண்ணுவது என்பதற்கு விதிகள் எதும் இல்லை என்றும், ஒப்புகை சீட்டை எண்ணும்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையுடன் வேறுபாடு இருந்தால், அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்றும் கூறி, முரண்பாடுகள் ஏற்படும் மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மிகிருபா என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஸ்வரூப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

  அப்போது நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு, தேர்தல் முடிந்தவுடனோ அல்லது விடுமுறை காலத்தின் முதல் இரண்டு அமர்வுகளையோ அணுகாமல் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி முறையீட்டை ஏற்க மறுத்தனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: