ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் மீதான ஊழல் ஆதாரங்கள்: அறப்போர் இயக்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் மீதான ஊழல் ஆதாரங்கள்: அறப்போர் இயக்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார் தொடர்பான ஆதாரங்களை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக அறப்போர் இயக்கம் தெரிவித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரி அமைச்சர் வேலுமணி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், தனக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் வேலுமணி தரப்பில், அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதரங்களை வெளியிடத் தயார் என அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாக சுட்டி காட்டினார்.

    இதை கேட்ட நீதிபதி, சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களை வெளியிடப் போவதாக தெரிவிக்கும் அறப்போர் இயக்கம், ஆதாரங்களை ஏன் நீதிமன்றத்தில்

    பதில் மனுவாக தாக்கல் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி, வழக்கை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Arappor Movement, Minister sp velumani