வெளிநாட்டில் உள்ள உறவினரிடம் பேச நளினி, முருகனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

நளினி, முருகன்

லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயாருடனும் வாட்ஸ்-அப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

 • Share this:
  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேச சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயாருடனும் வாட்ஸ்-அப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது 2020 ஆகஸ்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது, முருகனின் தந்தை இறந்துவிட்டதால் அவரின் தாயாருக்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன், பேச அனுமதிக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

  ALSO READ | வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் உள்ள வீடியோ, படங்களை ஈஸியா டவுன்லோட் செய்வது எப்படி?

  அத்துடன், வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களுடன் வாட்ஸ்-அப் வீடியோ மூலம் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: