பிளாஸ்டிக் தடை - வியாபாரிகளை துன்புறுத்த வேண்டாம்: உயர்நீதிமன்றம்

அரசாணையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும், வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 10:34 PM IST
பிளாஸ்டிக் தடை - வியாபாரிகளை துன்புறுத்த வேண்டாம்: உயர்நீதிமன்றம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: January 10, 2019, 10:34 PM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர, மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக, 50 சில்லறை பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட 14 பொருட்களை தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசாணையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும், வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...