கோவை குண்டுவெடிப்பு ஆயுள் கைதிக்கு பரோல் கோரிய மனு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கோவை குண்டுவெடிப்பு ஆயுள் கைதிக்கு பரோல் கோரிய மனு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஆயுள் கைதி பாட்ஷா
  • News18
  • Last Updated: April 29, 2019, 6:45 PM IST
  • Share this:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவுக்கு பரோல் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அல் - உம்மா தலைவர் பாட்ஷா. அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாட்ஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாட்ஷாவுக்கு இதுவரைக்கும் 162 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2018 டிசம்பரில் பரோல் கேட்டு அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பாட்ஷாவுக்கு பரோல் கோரிய விண்ணப்பத்தை மீது 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also see...
First published: April 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்