கட்டண கழிப்பறையின் கூரை இடிந்து தொழிலாளி உயிரிழப்பு - நகராட்சி பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

நகராட்சி நிர்வாகம் கழிவறையை முறையாக பராமரிக்காததே தனது கணவர் மரணத்திற்கு காரணமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமாரின் மனைவி சரஸ்வதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கழிவறை மேற்கூரை இடிந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் பல்லடம் நகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அசோக்குமார் கடந்த மாதம் மே 12-ம் தேதி பல்லடம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டண கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக பல்லடம் நகராட்சியில் புகார் அளித்தார்.

நகராட்சி நிர்வாகம் கழிவறையை முறையாக பராமரிக்காததே தனது கணவர் மரணத்திற்கு காரணமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமாரின் மனைவி சரஸ்வதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கணவரின் மரணத்திற்கு காரணமான பல்லடம் நகராட்சி நிர்வாகம் தனது, மூன்று குழந்தைகள், மாமனார் மாமியார் ஆகியோரிம் வாழ்வாதாரத்திற்காகவும், படிப்பு செலவுகளுக்காகவும் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, வழக்கு குறித்து தமிழக அரசும், பல்லடம் நகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: