கஜா புயல்: நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!
கஜா புயல்: நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி (கோப்புப் படம்)
நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று இனியவன் தரப்பில் வாதிடப்பட்டது.
கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் பலர் வீடுகள் மற்றும் விவசாய பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை இழந்தனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர்.
அப்போது அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி 140-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது .
இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.