"அடுத்த ஆட்சி" என்ற ஜோதிட புத்தகங்களை திருப்பி ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

2021-ல் தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் ஜாதங்களை ஜோதிட முறைப்படி ஆராய்ந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

news18
Updated: April 12, 2019, 12:52 PM IST
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: April 12, 2019, 12:52 PM IST
தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட "அடுத்த ஆட்சி" என்ற ஜோதிட புத்தகங்களை திருப்பி ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட "அடுத்த ஆட்சி" என்ற தலைப்பிலான 79,200 புத்தகத்தை விடுவிக்க கோரி சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் ராசிராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 2021-ல் தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் ஜாதங்களை ஜோதிட முறைப்படி ஆராய்ந்து இந்த புத்தகங்களை வெளியிட்டதாகவும், அந்த புத்தகத்தில் எந்த ஆட்சேபனை கருத்துகளும் இல்லாத நிலையில், தஞ்சாவூர் கொண்டு சென்றபோது, தேர்தல் ஆணையம், அந்த புத்தகங்களை பறிமுதல் செய்தது சட்ட விரோதமானது என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு விசாரணைக்கு வந்த போது, ரஃபேல் குறித்த புத்தகம் பறிமுதல் செய்யப்பட்ட அன்றே திருப்பி ஒப்படைக்கப்பட்டது போல், தன்னுடைய புத்தகங்களையும் திருப்பி அளிக்க தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த புத்தகங்களை திரும்ப பெறக் கோரி தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் ஏற்கனவே அளித்த மனுவையே மேல்முறையீட்டு மனுவாக கருதி, தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...