பரோல் கேட்டு நளினி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு

அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

news18
Updated: April 15, 2019, 5:18 PM IST
பரோல் கேட்டு நளினி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு
நளினி
news18
Updated: April 15, 2019, 5:18 PM IST
மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவரும், நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதி கோரிய மனுவுக்கு ஜூன்11-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’ எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...