சொத்து வரிப் பட்டியலை தாக்கல் செய்ய திமுக எம்.பி-க்கு நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி. - ஆர். எஸ். பாரதி

ஆலந்தூர் பகுதியில் உள்ள 160 முதல் 167 வரையிலான வார்டுகளுக்கு ஏற்கனவே அதிக சொத்து வரி வசூலிக்கப்படுவதாக கூறி ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆலந்தூர் பகுதியில் பழைய சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தாத வணிக நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்ய திமுக எம்.பி., ஆர். எஸ். பாரதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்துவரியை 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிளுக்கு 100 சதவீதமும் உயர்த்தி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ஆலந்தூர் பகுதியில் உள்ள 160 முதல் 167 வரையிலான வார்டுகளுக்கு ஏற்கனவே அதிக சொத்து வரி வசூலிக்கப்படுவதாக கூறி, திமுக எம்பி., ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்த பகுதிகளுக்கு கூடுதல் வரி வசூலிக்க கூடாது, மக்கள் கருத்தை கேட்டு மீண்டும் வரியை மறு நிர்ணயம் செய்ய வேண்டும், இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஆலந்தூர் பகுதியில் பழைய சொத்து வரியை உரிய நேரத்துக்கு செலுத்தாத வணிக நிறுவனங்களின் பட்டியலை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய ஆர்.எஸ். பாரதிக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: