முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கணவரை மீட்க மனு தாக்கல் செய்த மனைவி - ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

கணவரை மீட்க மனு தாக்கல் செய்த மனைவி - ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

கணவரை மீட்க மனைவி மனு

கணவரை மீட்க மனைவி மனு

கணவரை காணவில்லை என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனைவிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதாம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை மாவட்டம் வெள்ளியம் குன்றத்தைச் சேர்ந்த உஷா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், நானும் எனது கணவர் சவுடியும் மதுரை புதூரில் ஹோட்டல் நடத்தி வருகிறோம் .கடந்த 2017 ஆம் ஆண்டு ஹோட்டலுக்கான கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக விவேக் என்னும் நபரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது .

இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி மாதம் விவேக் அவரது அடியாட்களுடன் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு மிரட்டினார். இதுதொடர்பாக நவம்பர் 24 ம் தேதி காவல்துறையினரிடம் எனது கணவர் புகார் அளித்தார். 28ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு புதூர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்த நிலையில் விசாரணைக்காக சென்ற எனது கணவர் வீடு திரும்பவில்லை.

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே எனது கணவரை மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் சுந்தர மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,மனுதாரரின் கணவர் காணவில்லை என கூறப்பட்ட நிலையில், அந்த மனுதாரரும் கணவர் சவுடியும் மருத்துவமனை ஒன்றில் இருந்ததாக அறிந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: “உதயநிதி இல்ல.. அவர் மகன் வந்தாலும் வாழ்கனு தான் சொல்லுவோம்” - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

இதை கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்ட பிறகு மனுவை ஏன் திரும்ப பெறவில்லை என கேள்வி எழுப்பினார். சட்ட விதிகளை தவறாக பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

First published:

Tags: Madurai HC, Madurai High Court