• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குண்டர் சட்டத்தை முறையாக பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

குண்டர் சட்டத்தை முறையாக பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

குண்டர் சட்டத்தை பிரயோகிக்கும் போது, சமூக விரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்க உரிய நடைமுறைகளை கடைபிடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கும் போது, அந்தச் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பிக்காதபடி, உரிய நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில் என்ற ரமேஷ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி பத்மாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றாமலும், அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை முறையாக பரிசீலிக்காமலும், அறிவுரை குழுமம் காலதாமதமாக குண்டர் சட்டத்தில் கைதை உறுதி செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் அடங்கிய அமர்வு, அறிவுரைக்குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசு இயந்திரம் (govt missionary) தங்களிடம் கொடுக்கப்படும் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டி செந்திலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

    மேலும், சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டப்படுவதால், இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கும்போது, சமூக விரோதிகள் எளிதில் அச்சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: