”ஆக்கிரமிப்பை அகற்ற ராணுவத்தை அழைப்போம்”- நீதிமன்றம் எச்சரிக்கை

நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி, 2018 ஜனவரி மாதம், கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது.

news18
Updated: January 11, 2019, 11:28 AM IST
”ஆக்கிரமிப்பை அகற்ற ராணுவத்தை அழைப்போம்”- நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: January 11, 2019, 11:28 AM IST
அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உள்ள கரிக்காட்டு குப்பம், சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி, 2018 ஜனவரி மாதம், கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு நெருங்கிய நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அரசுக்கு எதிராக ஜான்சி ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நில ஆக்கிரமிப்பாளர்களால், மனுதாரரின் கணவர் தாக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை இன்றுக்குள் அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் நேரில் ஆஜராக உத்தரவிடுவதாக தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட தயங்கப் போவதில்லை எனவும் எச்சரித்தனர்.

Also see...
Loading...
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...