போதைப்பொருள் கடத்தல் மண்டலமா இந்தியா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

போதை பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மண்டலமா இந்தியா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
மாதிரிப் படம்
  • Share this:
போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக இந்தியா பயன்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதை பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விசயமாக கருதுவதாக தெரிவித்ததுடன், வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய - மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்கு தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தடுப்பு காவல் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்த காரணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற போதைபொருட்களை பயன்படுத்துபவர்கள் என்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள் என்ற கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.தொடர்ந்து, போதைப்பொருள் பயன்படுத்துவோரால் ந என்ன குற்றங்கள் நடக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க மையங்கள் ஏதும் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், போதை பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா. மாணவர்களும், இளைஞர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா. போதை பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா. கஞ்சா போன்ற போதை பொருட்கள் எங்கு விளைவிக்கப்படுகின்றன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Also read... ஊரடங்கில் தளர்வு - இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை

அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் காவல்துறையிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் கண்காணிக்கவோ, அவற்றை அழிக்கவோ ஏன் முடியவில்லை என்றும் போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோத பணம் சம்பாதிப்பதை தவிர்த்து வேறு காரணங்கள் உள்ளதா.

போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன. கடந்த 10 ஆண்டுகளில் போதை பொருள் கடத்தலில் எவ்வளவு தொகை சம்பந்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களை கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்க கூடாது.

என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading