ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்கத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஓட்டுனர் உரிமத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் முகவரியை குறிப்பிட தடை கோரி தென்னிந்திய ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்களின் கூட்டமைப்பின் இணை செயலாளர் தேவதாஸ் காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

news18
Updated: February 14, 2019, 2:13 PM IST
ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்கத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
கோப்புப் படம்
news18
Updated: February 14, 2019, 2:13 PM IST
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி முகவரியுடன் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்கத் தடை கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மத்திய அரசின் மென்பொருள் மூலம் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமங்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஓட்டுனர் உரிமம் விண்ணப்பவர்கள் நிரந்தர முகவரிக்கான அனைத்து ஆவணங்களையும் வழங்கியும் இந்த ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமங்களில் நிரந்தர முகவரி இடம்பெறுவதில்லை. மாறாக தற்காலிக முகவரி மட்டும் குறிப்பிட்டு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் முகவரி மட்டும் பதிவிடப்பட்டு அளிக்கப்படுகிறது.

ஓட்டுனர் உரிமத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் முகவரியை குறிப்பிடத் தடை கோரி தென்னிந்திய ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தேவதாஸ் காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கடந்த மாதம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமங்களில் ஓட்டுனரின் நிரந்தர முகவரியை குறிப்பிட்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்க உத்தரவிட கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. கிருஷ்ணகுமார், மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Also see...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...