ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எதிர்காலத்தில் தபால் துறை தேர்வு தமிழில் நடைபெறுமா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

எதிர்காலத்தில் தபால் துறை தேர்வு தமிழில் நடைபெறுமா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தபால் துறை தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 23-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தபால் துறை தேர்விலும் தமிழ் மொழி தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்காதது சட்ட விரோதமானது எனவும், இந்தி மொழி தாய்மொழியாக அல்லாத மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருங்காலங்களில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தபால் துறை தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Postal Exam