ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வைகோவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

வைகோவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

7 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், இந்த வழக்கில் 9 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ் செல்வன் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி இலங்கை ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ் அமைப்புகள் 2007 நவம்பர் 12-ம் தேதி இரங்கல் ஊர்வலம் நடத்தின.

  தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 262 பேருக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2009-ம் ஆண்டே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  7 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், இந்த வழக்கில் 9 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வைகோ மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: High court, Vaiko