Home /News /tamil-nadu /

இந்து கடவுள் பற்றி பாரதிராஜா பேசிய வழக்கு: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இந்து கடவுள் பற்றி பாரதிராஜா பேசிய வழக்கு: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

பாரதிராஜா

பாரதிராஜா

தன்னை துன்புறுத்தும் நோக்கில் நான்கு மாதங்களுக்கு பின் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2018 ஜனவரி மாதம் நடந்த கடவுள்-2 பட துவக்க விழாவில் இந்து கடவுள்கள் இறக்குமதி கடவுள்கள் என பேசியதாகவும், ஆண்டாள் கட்டுரை சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் இயக்குனர் பாரதிராஜா மீது இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில், வடபழனி காவல் நிலையத்தினர் மே மாதம் 12-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

    தன்னை துன்புறுத்தும் நோக்கில் நான்கு மாதங்களுக்குப் பின் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் பேசவில்லை எனவும், அரசியல் சாசனம் வழங்கிய கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தன் கருத்தை பதிவு செய்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா வழக்கு குறித்து வடபழனி காவல் ஆய்வாளர், புகார்தாரர் நாராயணன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி