• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணை: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டது, மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய மனுவுக்கு, ஏப்ரல் 10-க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த 13-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

    இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டது, மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி தஹில்ரமானி நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தீவிரமான இந்த வழக்கின் விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ க்கு உத்தரவிட்டனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: