ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தடை!

மனதை செலுத்தாமல், அஞ்சல் அலுவலகம் போல அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் இளங்கோவன் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தடை!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
  • News18
  • Last Updated: April 15, 2019, 5:15 PM IST
  • Share this:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி திருச்சி அருகே சமயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறு வழக்கு வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்றும் இளங்கோவன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைதுறை தொடர்பான விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருவது தொடர்பாக பேசியதாகவும், இதில் முதலமைச்சர் பெயருக்கு எவ்விதத்திலும் அவதூறு பரப்பும் வகையில் இல்லை என்றும் இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.

மனதை செலுத்தாமல், அஞ்சல் அலுவலகம் போல அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் இளங்கோவன் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி எவை எவை அவதூறு கருத்து என்ற அடிப்படையில் வரும் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளதால், அதன்பிறகே இதில் பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்ததுடன், மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading