போக்ஸோ சட்டம் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

விவரம் தெரியாமல் செய்யும் தவறுகளால் இளம் வயதிலேயே குழந்தைகள் தங்களுடையை வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

news18
Updated: April 13, 2019, 5:57 PM IST
போக்ஸோ சட்டம் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: April 13, 2019, 5:57 PM IST
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்ஸோ) குறித்து மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக சேவை அமைப்புகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் டிப்ளமோ படித்த மைனர் பெண், தனியார் நிறுவனத்தில் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அப்பெண்ணின் தாய் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறையினர் சாந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் நடத்திய விசாரணையில், அப்பெண்ணுக்கு 17 வயது பூர்த்தியாகியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண்ணின் தாயிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, தனது மகளை கூட்டிச் சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்சியடைந்த நீதிபதிகள், முதலில் பெண்ணை காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, இந்த மைனர் பெண்ணுக்கு 17 வயது தான் ஆகியுள்ளது என்று தெரிந்தவுடன் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால், அந்த பெண்ணை கூட்டிச் சென்ற வாலிபர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது மைனர் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குரியாகிவிட்டது.

இதற்கு காரணம் போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் எனக் கூறிய நீதிபதிகள், போக்ஸோ சட்டம் குறித்து சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

விவரம் தெரியாமல் செய்யும் தவறுகளால் இளம் வயதிலேயே இவர்கள் தங்களுடையை வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள் எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...