விதிகளை வகுக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை தொடரும்!

ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஜனவரி 31-ம் தேதிக்குள் விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விதிகளை வகுக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை தொடரும்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 17, 2018, 11:33 AM IST
  • Share this:
ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஜனவரி இறுதிக்குள் விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், நோயாளிகளுக்கு தவறான போலி மருந்துகள் சென்றவடைவதாகவும், எனவே ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Madras High Court | சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்அப்போது, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஜனவரி 31-ம் தேதிக்குள் விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விதிகள் வகுக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய கூடாது என உத்தரவிட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், ஜனவரி 31-ம் தேதிக்கு பிறகு இரண்டு மாதத்திற்குள் மத்திய அரசிடம் முறையான உரிமம் பெற்ற பின்னரே மருந்து நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Also read... உரிமம் இல்லாத ஆன்லைன் நிறுவனங்களுக்கு மட்டுமே மருந்து விற்க தடை: நீதிமன்றம்Also see...

First published: December 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading