முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீருக்காக கையேந்துகிறோம்: உயர்நீதிமன்றம் வருத்தம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீருக்காக கையேந்துகிறோம்: உயர்நீதிமன்றம் வருத்தம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது நீர்நிலைகளை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் அனைத்து வளங்கள் இருந்தும் அதை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால், தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னையில் நீர் மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி வி.பி.ஆர் மேனன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, நீர் நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரத்திற்கே சிக்கல் ஏற்பட்டுவிடும் எனவும், கடலில் மட்டுமே தண்ணீரை காண முடியும் எனவும் வேதனை தெரிவித்தனர்.

நீர் நிலைகளைப் பாதுகாக்க அக்கறை காட்டாத அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் தான் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய நீதிபதிகள், வெளிநாடுகளில் பூமிக்கு அடியில் எதேனும் திட்டங்களை அமல்படுத்துவதாக இருந்தால், நிலத்தடி நீரின் போக்கை, மாற்றிவிடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வார்கள். இல்லாவிட்டால் அந்தத் திட்டத்தையே ரத்து செய்துவிடுவர் என குறிப்பிட்டனர்.

சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்ப்படுத்தும் போது நீர்நிலைகளை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி என குறிபிட்ட நீதிபதிகள், நீர்நிலைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை ஆகியோருக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

Also see...

First published:

Tags: Chennai High court, Water management