Home /News /tamil-nadu /

காதலர்களைக் கொன்றவருக்குத் தூக்கு! தேனி நீதிமன்ற உத்தரவு உறுதி

காதலர்களைக் கொன்றவருக்குத் தூக்கு! தேனி நீதிமன்ற உத்தரவு உறுதி

திவாகர் என்ற கட்டவெள்ளை

திவாகர் என்ற கட்டவெள்ளை

ரத்தவெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கஸ்தூரியையும் கொலை செய்துவிட்டு தப்பித்தது தெரியவந்தது.

  • News18
  • Last Updated :
காதலர்களைக் கொன்றவருக்குத் தூக்குத்தண்டனை என்ற தேனி நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர், சுருளி அருவியிலிருந்து கைலாசநாதர் குகைக் கோயிலுக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ. டி போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்பவரிடம் நடத்திய விசாரணையில், காதலர்கள் இருவரும் காட்டுக்குள் தனிமையில் இருந்தபோது திவாகர் அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் கஸ்தூரியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதும், அதை தடுக்க முயன்ற எழில் முதல்வனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததோடு, கஸ்தூரியையும் சரமாரியாக  வெட்டியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கஸ்தூரியையும் கொலை செய்துவிட்டு தப்பித்தது தெரியவந்தது.

எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம்,
திவாகர் என்ற கட்டவெள்ளையை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 7வருட கடுங்காவல் தண்டனையும்,
ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை உறுதி செய்ய கோரி தேனி மாவட்ட நீதிமன்றமானது, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தீர்ப்பை அனுப்பி வைத்தது, அந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் புகழேந்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள்,
தேனி மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தையும் உறுதி செய்திருக்கிறார்கள்.

இதன் மூலம் கட்டவெள்ளைக்கு விதிக்கப்ப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lok Sabha Key Constituency, Theni

அடுத்த செய்தி