• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சமையல் எண்ணெய் சில்லறை முறையில் விற்க தடை - வலுக்கும் எதிர்ப்பும், ஆதரவும்

சமையல் எண்ணெய் சில்லறை முறையில் விற்க தடை - வலுக்கும் எதிர்ப்பும், ஆதரவும்

மாதிரி படம்

மாதிரி படம்

Ban on Loose Edible oil | எண்ணெய் கலப்படத்தால் 25 வயது இளைஞர்களுக்கே கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கலப்படத்தை தடுக்கும் நோக்கில், சமையல் எண்ணெயை சில்லறை முறையில் விற்பனை செய்ய மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. மேலும் கலப்படம் செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

    மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாகவும்,  இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களை, 100, 300 மிலி என சில்லறை விலையில் விற்பனை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

    உரிய சான்றிதழ் பெற்ற பாக்கொட்டுகளில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. கலப்பட எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதாக தெரிவித்த நீதிமன்றம், பொதுமக்களின் உடல் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தது.



    இதனையடுத்து கலப்பட சமையல் எண்ணெய்களை கண்டுபிடிக்க, கடந்த 5 ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் எத்தனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  கலப்படம் செய்த நபர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் வினவியுள்ளது. மேலும் இதுபோன்று கலப்படம் செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    சமையல் எண்ணெய்யின் தரத்தை ஆய்வு செய்ய எத்தனை பரிசோதனை சோதனை கூடங்கள் உள்ளன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவற்றில் தனியார் மற்றும் அரசு ஆய்வங்கள் எத்தனை என்பது குறித்து, தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை வரவேற்றுள்ள மனுதாரர் அருண்நிதி, எண்ணெய் கலப்படத்தால் 25 வயது இளைஞர்களுக்கே கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

    எண்ணெய் கலப்படத்தை தடுப்பதற்காக உயர்நீதிமன்றக் கிளை இந்த சிறப்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் வழக்கறிஞர் வீரா கதிரவன் தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 18ம் தேதி நடைபெறுகிறது. எண்ணெயை பாக்கெட் செய்வதன் மூலம் சிறு குறு நிறுவனங்களும், மக்களும் பாதிக்கப்படுவார்கள் என எண்ணெய் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: