முன்னாள் அமைச்சரின் மகனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு ரத்து!

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் புகார்தாரர் சமரசம் செய்து கொண்டதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் எனக் கூறி, வீரபாண்டி ஆ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் மீதான நில மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
ராஜா
  • News18
  • Last Updated: April 3, 2019, 4:01 PM IST
  • Share this:
நகைக்கடை அதிபர் நிலத்தை அபகரிக்க முயற்சித்ததாக
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சேலம் அங்கம்மாள் காலனியில் வசிக்கும், நகை கடை அதிபர் பிரேம்நாத்த்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், நிலத்தை விற்க மறுத்ததால், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் சேலம் மத்திய குற்றப்பிரிவு, தி.மு.கவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ஏ.ராஜா உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.


சேலம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் தற்போது உயிருடன் இல்லை எனவும், புகார்தாரருடன் சமரசம் செய்துள்ளதால் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் புகார்தாரர் சமரசம் செய்து கொண்டதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் எனக் கூறி, வீரபாண்டி ஆ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் மீதான நில மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சென்னை திரிசூலத்தில் உள்ள மனசு ( மனநல சுகாலயம்) என்கிற மனநல காப்பகத்துக்கு ரூ. 25 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையை, 2 வாரத்தில் நன்கொடையாக வழங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால், இந்த உத்தரவு தானாக ரத்தாகிவிடும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading