முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கத் தடை!

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கத் தடை!

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரி

முதல்வர் தேர்வு நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும், முதல்வர் தேர்வு நடைமுறைகளை ரத்து செய்தும், புதிதாக தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி முதல்வராக சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நந்தினி உள்ளிட்ட பேராசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவும், முதல்வர் தேர்வு நடைமுறைகளை ரத்து செய்தும், புதிதாக தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சேட்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேட்டுவின் நியமனம் திரும்பப் பெறப்பட்டு, மூத்த பேராசிரியரான அருள்மொழிச்செல்வன் முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முதல்வர் சேட்டு நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.

அதேசமயம், முதல்வர் தேர்வு நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும், முதல்வர் தேர்வு நடைமுறைகளை ரத்து செய்தும், புதிதாக தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also see...

top videos

    First published:

    Tags: Pachayappa's college