ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'தமிழ் தேசிய மக்கள் கட்சி மாநாட்டுக்கு அனுமதி!' - உயர்நீதிமன்றம்

'தமிழ் தேசிய மக்கள் கட்சி மாநாட்டுக்கு அனுமதி!' - உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

கோவை மாவட்டம் சித்தா புதூரில் மே 17 இயக்கம் சார்பில் மார்ச் 7-ம் தேதி பொது கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி மறுத்து கோவை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மே 17 இயக்கத்தை சேர்ந்த தினேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி மீண்டும் மனு அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி நடத்தவுள்ள மாநாட்டுக்கு அனுமதி கோரி தமிழ் தேசிய மக்கள் கட்சி அளித்த கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி அரியலூரில் பொது கூட்டம் நடத்த திட்டமிட்டு

  அதற்கு அனுமதி கோரி மார்ச் 7-ம் தேதி அரியலூர் காவல் ஆய்வாளருக்கு மனு அளித்ததாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் அதிகாரியை அணுகுமாறு குறிப்பிட்டு மனுவை காவல் ஆய்வாளர் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  மார்ச் 27-ம் தேதி இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மீண்டும் மனு அளித்தும் அவரும் இதுவரை எந்த பதிலும் அளிக்காததால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

  இந்த மனு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரீசீலிக்குமாறு அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை பரீசிலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

  இதேபோல, கோவை மாவட்டம் சித்தா புதூரில் மே 17 இயக்கம் சார்பில் மார்ச் 7-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி மறுத்து கோவை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த தினேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி மீண்டும் மனு அளிக்க உத்தரவிட்டனர்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Madras High court, Tamil Culture