மதுசூதனன் மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: சசிகலா இரங்கல்

மதுசூதனன் மறைவு அதிமுக-வுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: சசிகலா இரங்கல்

மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில ஆண்டுகளாகவே மதுசூதனன் உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  Also read: எம்.ஜி.ஆர் ரசிகன் முதல் அதிமுக அவைத்தலைவர் வரை.. மதுசூதனின் வாழ்க்கை வரலாறு

  சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ சோதனையான காலகட்டங்களில் துணை நின்றவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு முதல் அவைத் தலைவராகவும் இருந்த போதும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். அவர் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனைத்து தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: