Home /News /tamil-nadu /

மதுரையில் விலங்குகளுக்கு கண்ணிவெடி வைத்தவர் கைது!

மதுரையில் விலங்குகளுக்கு கண்ணிவெடி வைத்தவர் கைது!

கண்ணிவெடி வைத்த தர்மராஜ்

கண்ணிவெடி வைத்த தர்மராஜ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மதுரை வாடிப்பட்டி அருகே வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவதற்கு கண்ணி வெடி வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் கடந்த வாரம் அழகர்கோவிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளை கண்ணி வெடியில் சிக்கி தாடை சிதைந்ததால் சில தினங்களுக்கு முன் காளை இறந்தது.

    காளை இறந்தது தொடர்பாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் குட்லாடம்பட்டியை பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கண்ணி வெடி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை சாப்பிடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

    காட்டு பன்றிகளுக்கு தான் கொய்யா பழத்திற்குள் வெடிமருந்தை பதுக்கி வெடி வைத்ததாகவும், இதில் எதிர் பாரத விதமாக கோவில் காளை அதைத் தின்று இறந்துவிட்டது என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உடனடியாக தர்மராஜ் என்பவரை கைது செய்த வாடிப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    Published by:Ilavarasan M
    First published:

    Tags: Jallikkattu kaalai dead, Landmines, Madhurai man arrested

    அடுத்த செய்தி