கவலைப்பட வேண்டாம், விரிவான உத்தரவு பிறப்பிப்போம் - பெண் காவலரிடம் ஃபோனில் பேசிய நீதிபதிகள்..

பெண் காவலருக்கு பாதுகாப்புடன், விடுப்புடனான ஊதியமும் தரப்படவேண்டும் என உத்தரவிட்டதுடன், கவலைப்படவேண்டாம், உரிய உத்தரவு பிறப்பிக்கிறோம் என அவரிடம் ஃபோனில் தெரிவித்தனர்.

கவலைப்பட வேண்டாம், விரிவான உத்தரவு பிறப்பிப்போம் - பெண் காவலரிடம் ஃபோனில் பேசிய நீதிபதிகள்..
காவலர் ரேவதி
  • Share this:
சாத்தான்குளம் வழக்கில் இன்று கேள்வியெழுப்பிய மதுரைக் கிளை நீதிபதிகள், ஒரு மனிதனை இன்னொரு மனித னை ஏன் அடிக்கிறான்? காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கை இன்னும் தொடர்கிறதா? இந்த நிலை மாறாதா அடுத்த 100 ஆண்டுகளுக்கு இதுதான் நடக்கு மா? என்று கேட்டதுடன், சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்புடன், விடுப்புடனான ஊதியமும் தரப்படவேண்டும் என உத்தரவிட்டதுடன், கவலைப்படவேண்டாம், உரிய உத்தரவு பிறப்பிக்கிறோம் என அவரிடம் ஃபோனில் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்தவிவகாரம் தேசிய அளவில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தானாக முன்வந்து கையில் எடுத்த மதுரை உயர்நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் தலைமை பெண் காவலர் ரேவதியின் வாக்குமூலம் முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ரேவதி தனது வாக்குமூலத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இரவு முழுவதும் லத்தியால் தாக்கப்பட்டனர் என்றார். மேலும் லத்தி மற்றும் மேசை மீது ரத்தகாயங்கள் இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார்.


தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாரள் ஸ்ரீதார், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தந்தை, மகன் மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியிடம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரின் கணவர் சந்தோசம், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனது மனைவி ரேவதி வாக்குமூலம் அளித்த நாளிலிருந்து சாப்பிடவில்லை. கடும் மனஉளைச்சலில் உள்ளார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் வருவதாகவும், பாதுகாப்பு கருதி அதை எடுக்கவில்லை. எனது மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading