ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவின் சிபிஐ காவல் நீட்டிப்பு

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவின் சிபிஐ காவல் நீட்டிப்பு

குட்கா போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது

குட்கா போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது

  • News18
  • 1 minute read
  • Last Updated :

குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரின் சிபிஐ காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா லஞ்ச வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 5 பேரின் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் மாதராவ் சீனிவாச ராவ் ஆகியோரிடம் விசாரணை நிறைவடையாததால், காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதையடுத்து காவலை நீட்டித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவரையும் திங்கள்கிழமை மாலை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

மற்ற மூவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, அவர்களின் ஜாமின் மனு மீது 20-ம் தேதிக்குப் பிறகு விசாரணை நடைபெறும் என்றார். இதனிடையே விசாரணைக்கு ஆஜராகியுள்ள காவல் ஆய்வாளர் சம்பத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

First published:

Tags: Banned Pan Gutka, Cbi custody, Gutka Pan masala Seized, Gutka scam