கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யூடியூபர் மதன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்த பாலியல் வீடியோவை, அதே கட்சியைச் சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.பாஜக-வில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடே அந்த வீடியோ வெளியிடப்பட்டதாகவும் அதற்கான ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து கே.டி.ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மறுபுறம் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
Also Read: தங்க செயினை விழுங்கிய திருடன் - பத்திரமாக மீட்ட போலீசார்!
வீடியோ வெளியிட்டதில் மதனுக்கு உள்நோக்கம் இருக்குமோ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாக சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில், அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மதன் ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதற்கு ஆதாரமாக அண்ணாமலை தங்களிடம் பேசிய ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில், கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிடுவதற்கு முன் அண்ணாமலையை சந்தித்து பேசியதாகவும், அப்போது, கட்சி பெண்ணுக்கு நீதி தேவை என்பதால், வீடியோவை வெளியிடுமாறு அவர் கூறியதாகவும் மதன் குற்றம்சாட்டியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீடியோவை வெளியிட்டபிறகு பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும், உங்கள் பக்கம் எப்போதும் நிற்பேன் என்றும் அண்ணாமலை கூறியதாகவும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக அலுவலகத்தில் உள்ள கட்சித் தலைவர் அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது என அண்ணாமலை கூறியதாகவும், அதனாலேயே தனது அறைக்குள் எந்தப் பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை என அண்ணாமலை பேசியதாகவும் மதன் ஆடியோ வெளியிட்டுள்ளார். கே டி ராகவன் வீடியோ சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், அண்ணாமலை குறித்த ஆடியோக்கள் வெளியாகி இருப்பது தமிழக பாரதிய ஜனதாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Phone audio, Politics, Video