ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Madan PUBG Youtube மதன் யூடியூப் சேனல் மீது விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல உரிமை ஆணையம்

Madan PUBG Youtube மதன் யூடியூப் சேனல் மீது விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல உரிமை ஆணையம்

மதன்

மதன்

நம் குழந்தைகள் விளையாடும் ஆன்லைன் கேம் எந்த அளவு ஆபத்தானதாக மாறியுள்ளது என்பதற்கு இதுதான் ஆதாரம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

சிறுவர்கள் விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் யூடியூபர் ஒருவர் மீது பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு புகார்கள் எழுந்துள்ளன.

இப்படி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசும் மதன் யூடியூப் சேனல் மீது க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளன. தன் மீது சொல்லப்படும் புகார்களுக்கு மதன் யூடியூப் சேனல் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை.

பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக அந்தவிளையாட்டை சிலர் விளையாடி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் முழ்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டின் ட்ரிக்சை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல்.

ALSO READ | திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்

ஆனால் அப்படி இந்த யூடியூப் சேனலில் பப்ஜி பற்றி பேசுவதை விட அந்தரங்கமும், பெண்களை பற்றிய ஆபாசமும் தான் அதிகம் பேசப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

சேனலில் ஆன்லைன் விளையாட்டில் வரும் மதன் ஆரவராமாக கெட்டவார்த்தைகளை பேசுவதும், பெண்களை பற்றி இழிவாகப் பேசுவதும் பப்ஜி விளையாடும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாக தெரிகின்றது. இதனால் விரைவாகவே மதன் யூடியூப் சேனலுக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.

ALSO READ | யமஹா பைக்கை தனியாக ஓட்டி அசத்திய ஆல்யா மானசா - ரசிகர்கள் பாராட்டு!

இப்படி ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன், உடனே அவர்களை இன்ஸ்டா பக்கத்திற்கு வரச்சொல்லி ஆடையில்லாமல் இரவில் வீடியோ சார்ட் செய்யலாம் என அழைக்கும் வீடியோக்களும் இணையத்தில உலா வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில வீடியோக்களில் முதலிரவிற்கு செல்லும் ஆண்கள் எப்படி தங்கள் உடலை பாத்துக்கொள்வது கை, கால் , இடுப்பு பகுதியை எப்படி வலுவாக்கிக்கொள்வது என்று அந்தரங்க மருத்துவராகவே மாறி தன்னுடைய அனுபவங்களை பகிர்கின்றார் மதன்.

ALSO READ |  மாதாந்திர கடன் தவணையை செலுத்த கால அவகாசம்...வங்கியாளர்களுடன் அமைச்சர் பி.டி.ஆர் ஆலோசனை

ஆணாக மாறினால் நீ என்ன செய்வாய், பெண்ணாக மாறினால் நீ என்ன செய்வாய், பெண்களின் அந்தரங்க பாகங்கள் பற்றி கேட்டு பேசுவது போன்றவையும் ஆன்லைன் விளையாட்டில் பேசிக்கொள்ளும் பேச்சுக்களா என்ற கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஆண்களிடம் தகாதவார்த்தையில் பேசி ‘போடா டீசல் மண்டையா’ என்று திட்டிஅனுப்பும் மதன் பெண் என்றால் அந்தரங்கத்தைப் பற்றி பேசி, மூன்றாவது மனைவியாக இருந்துகொள் என்று அழைப்பு விடுத்து ஆன்லைன் விளையாட்டில் தன்னை ஒரு ப்ளே பாயாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்.

ALSO READ |  தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - கமிஷனரிடம் சார்லி புகார்!

ஜாலியாக பேசி விளையாடினாலே நல்ல வருமானம் கிடைக்கும் என்று இவரை பின்பற்றி சில சிறுவர்களும் யூடியூப் சேனலை தொடங்கி ஆபாசமாக பேசிவருவதாக குற்றம் சாட்டுகின்றனர் பல யூடியூபர்கள்.

இந்த யூடியூப் சேனல் மீது ஆபாசமாக பேசுவது ,பெண்களை இழிவாக பேசுவது தொடர்பாக க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆனையத்திற்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

ALSO READ | சீமான் மீது அவதூறு பரப்பியவருக்கு மிரட்டல்... நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மதன், தான் ஆன்லைன் விளையாட்டு சேனல் நடத்துவதால் அவ்வப்போது சில பல ஆபாச வார்தைதகள் வரத்தான் செய்யும் அதல்லாம் தப்பா எடுத்துகிறதா ப்ரோ எனக் கூலாகக் கேட்கிறார்.

இத்துடன் தான் சூப்பர் சாட் மூலமாகவே பணம் பெறுவதாகவும் அது தனக்கு யூடிப் மூலம் கிடைக்கும் வருமானம் என்றும் விளக்கமளித்துள்ளார். தொடர்ச்சியாக 20 மணி நேரத்திற்கு மேலாக நேரலை செய்து கடின உழைப்பால் தான் முன்னேறி இருப்பதாகவும் அதை பிடிக்காத சிலர் பரப்பும் பொய் செய்திகள் இவை என்றும் மதன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | புதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு அதிக செலவு.. விசாரணை நடத்த தமிழிசை உத்தரவு

ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிகிடக்கும் சில புள்ளிங்கோவும் மதனுக்கு ஆதரவாக ஃப்ரோ இது ஆன்லைன் கேம் ஃப்ரோ இப்படி தான் பேசிக்குவோம் .அதான் 18 + னு போட்றுக்குள நீ ஏன் உன்புள்ளைய பாக்க வைக்குற என்று மதனுக்கு ஆதரவாக யூடியூபில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

மதன் யூடியூப் சேனல் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் எல்லாம் துக்கடாய் என்று நினைத்து விட வேண்டாம் என்று எச்சரிக்கும் காவல்துறையினர் முறையான விசாரணையை தொடங்குவோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் மதன் யூடியூப் சேனல் மீது காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும் புகாரை ஏற்று விசாரணையை தொடங்கியுள்ளது.

First published:

Tags: Youtube, YouTuber Madan