Home /News /tamil-nadu /

'மாநாடு படத்தை தடை செய்யாவிட்டால் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம்' : பாஜக அறிவிப்பு

'மாநாடு படத்தை தடை செய்யாவிட்டால் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம்' : பாஜக அறிவிப்பு

மாநாடு

மாநாடு

மாநாடு படத்தில் ''அமெரிக்காவில் குண்டு வெடிச்சா தீவிரவாதி என்கிறோம். அதுவே இந்தியான்னா முஸ்லீம் தீவிரவாதிங்கிறோம். தீவிரவாதிக்கு ஏது சாதி, மதம்'' என்று வசனம் இடம்பெற்றுள்ளது.

    மாநாடு திரைப்படத்தில் மத அடையாளங்களை கொச்சைப்படுத்தும் காட்சிகள் உள்ளதாக கூறியுள்ள பாஜக, படத்தை தடை செய்யாவிட்டால் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிடிவான கருத்தை தெரிவித்துள்ளனர். சிம்பு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாநாடு சில காரணங்களுக்காக நவம்பர் 25-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாள் இரவு படத்தில் சிக்கல் ஏற்பட, வெளியீடு ஒத்தி வைக்கப்படும் என தகவல் வெளியானது. படக்குழுவின் தீவிர முயற்சிக்கு பின்னர் திட்டமிட்டபடி மாநாடு கடந்த வியாழன் அன்று வெளியானது.

    படத்தில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். ''அமெரிக்காவில் குண்டு வெடிச்சா தீவிரவாதி என்கிறோம். அதுவே இந்தியான்னா முஸ்லீம் தீவிரவாதிங்கிறோம். தீவிரவாதிக்கு ஏது சாதி, மதம்'' என்று வசனம் வருகிறது. கடைசிக் காட்சியில் ரயில்வே நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையை காட்டுகிறார்கள். இதுவரை படம் குறித்து சர்ச்சை ஏதும் எழாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பாஜகவின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாநாடு படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது. படத்தில் போலீசாரை தீவிரவாதிகள் போல சித்தரித்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. இந்த சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.

    மாநாடு பட விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும். இந்த படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். பாஜக புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கைகள் எடுப்பதில்லை.' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: BJP, Simbhu

    அடுத்த செய்தி