Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 6 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 6 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் - மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் வெளிப்படையாக அறிவிக்கப்படும், சமூக வளைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.

தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இங்கே யாருக்காவது ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் வெளிப்படையாக அறிவிக்கப்படும், சமூக வளைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் இன்று, அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சர்வதேச விமானநிலையங்களில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை உட்பட 11 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை, வெளிநாடுகளில் இருந்து வரும் 1,608 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான தலா ரூ.700ஐ அரசே ஏற்கும்.

அதிக பாதிப்பு உள்ள 11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுபடுத்த 6 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா, டெல்டா ரக வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது. இரண்டு விமான பயணிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதனை முடிவின் அடிப்படையில்தான் தெரியவரும்.

திருச்சியில் ஒரு நபர், சென்னையில் ஒரு நபர் என 2 விமான பயணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பயணித்த விமானத்தில் முன் இருக்கை பின் இருக்கையில் அமரந்து வந்நவர்கள், விமான பணிப்பெண்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்?

தமிழகத்தில் யாருக்காவது ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டால் வெளிப்படையாக அறிவிக்கப்படும். சமூக வளைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனாவை ஏளனம் செய்தது போல் அல்லாமல் தற்போது அனைத்திற்கும் முழு கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்துவருகிறோம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் காலம் கடத்துபவர்கள் தயவு செய்து தடுப்பூசி செலுத்திகொள்ளுங்கள் இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: Ma subramanian, Omicron

அடுத்த செய்தி