Home /News /tamil-nadu /

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவம் படிக்க தமிழக அரசு துணைநிற்கும் - மா.சுப்பிரமணியன்

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவம் படிக்க தமிழக அரசு துணைநிற்கும் - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

TN Assembly : உக்ரைனில் இருந்து தமிழக திரும்பிய மாணவர்கள் மருத்துவம் படிக்க மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும், அந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு துணைநிற்கும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் குறித்து தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன், உக்ரைனில் நடைபெறும் யுத்தம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிற மாணவர்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடுமையான கல்வி கட்டண உயர்வால் பாதிக்கப்படுகிற மாணவர்கள் அயல்நாடுகளில் படிக்கின்ற சூழல் ஏற்படுகிறது.

    இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகின்றனர். உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மீட்கும் பிரச்சனையை வெறும் அலுவல் சார்ந்த விஷயமாக பார்க்காமல், வெறும் முதல்வராக பார்க்காமல், ஒரு தந்தையாக அனுகி அத்தனை மாணவர்களையும் மீட்டுக் கொண்டுவர முதலமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நன்றியோடு வாழ்த்தி வரவேற்கிறது.

    நாடு திரும்பிய மாணவர்களை நேரடியாக சென்று வரவேற்று உளவியல் ரீதியாகவும் அவர்களை அரசு ஆற்றுப்படுத்தியது. இந்த பிரச்சனை தொடங்கிய முதல் நாளே முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவ படிப்பை வேறு நாடுகளில் தொடர்வதற்கோ அல்லது ஒன்றிய அரசு சிறப்பு சட்டம் இயற்றி இந்தியாவிலேயே தொடங்குவதற்கோ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.

    இதேபோல மருத்துவ மாணவர்கள் விவகாரம் தொடர்பாக கவன ஈர்க்கும் தீர்மானத்தில் ஜவாஹிருல்லா பேசுகையில், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தோம். இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் உக்ரைன் சென்றிருந்தனர். ஆனால், பல மாநிலங்களுக்கு முன்னோடியாக நமது முதல்வர் மாணவர்களை மீட்டுள்ளார். அந்த மாணவர்கள் இங்கேயே மருத்துவம் படிக்கும் விதமாக தீர்மானம் கொண்டு வர வேண்டும், அவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    Read More : கொந்தகை அகழாய்வு தளத்தில் ஒரே குழியில் 10 முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

    இந்நிலையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் பேசுகையில், 1890 மாணவர்களை எந்த வித பாதிப்பும் இன்றி முதலமைச்சர் அழைத்து வந்தார். தமிழகத்தில் ஜெசிந்தா என்ற அதிகாரிமூலம் ஒரு குழு அமைத்து 7 வாட்சப் குழுவை உருவாக்கி, உக்ரைனில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களை பணிகளை மேற்கொண்டோம். வாட்சப் குழு ஏற்படுத்தி உக்ரைனில் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்களை ஒன்றிணைத்து இங்கு அழைத்து தமிழ்நாடு அரசு.

    Must Read : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு

    மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் முதல்வர், அதில் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுடைய கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படகூடாது என எழுதப்பட்டிருந்தது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதை பற்றி பேசும் போது, உக்ரைனில் போலவே போலந்து,கெஜகஸ்தான், ஹங்கேரி ரொமானியா, செக்குடியரசு உள்ளிட்ட நாடுகளில் Syllabus இருப்பதால் அங்கு மாணவர்கள் சென்று படிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கருத்து உருவாக காரணமாக இருந்தவர் முதல்வர் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இந்த மாணவர்களுக்கு தமிழகம் அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது அவர்கள் பாடதிட்டமுள்ள பிற நாடுகளுக்கு சென்று படிக்கும் நிலையை ஒன்றிய அரசு எடுத்தாலும் சரி தமிழக அரசு உரிய உதவிகளை செய்யும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ma subramanian, TN Assembly

    அடுத்த செய்தி