• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • Corona Death Certificate : கொரோனாவால் இறந்தவர்களுக்கு தனி சான்றிதழ் - மா.சுப்பிரமணியன்

Corona Death Certificate : கொரோனாவால் இறந்தவர்களுக்கு தனி சான்றிதழ் - மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிசாமி - மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிசாமி - மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்று காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழில் கொரோனா தொற்றால் இறந்தார் என்று குறிப்பிடப்படவில்லை...

 • Share this:
  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ஐ.எம்.சி.ஆர் யின் அறிவுறுத்தலின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழில் கொரோனா தொற்றால் இறந்தார் என்று குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக பல மாவட்டங்களில் புகார் வந்துள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டன என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இறப்பு சான்றிதழிலும் இறப்புக்கான காரணம் குறிப்பிடுவது இல்லை. மாற்றாக கொரோனாவால் உயிர் இறந்தவர்களுக்கான தனி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

  சிறு கழிப்பிடத்தை கூட இடித்து தயார் செய்து அதற்கு மினி கிளினிக் என போர்டு வைத்தனர். ஆனால் அதனை எதிர்க்கட்சித் தலைவர் சென்று பார்த்தாரா என தெரியவில்லை. அதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் நியமிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தை விட திமுக ஆட்சி காலத்தில் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவிற்கு தமிழகம் முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் திமுக அரசை பாராட்டினார் என்று கூறினார் மா.சுப்பிரமணியன்.

  முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசுகையில், இந்தியாவிற்கே நம்பிக்கை தரும் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களைக் காப்பதற்கு உதாரணமாய் கவச உடையில் சென்று முன்கள பணியாளர்களை உற்சாகப்படுத்துகிறார் முதலமைச்சர். ஆளுநர் உரையை நெஞ்சார வாழ்த்தி பாராட்டுகிறேன்.

  தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடமாட்டோம் என்ற முனைப்போடு இந்த அரசு செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்து அறநிலையத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தத் திட்டங்கள் வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ் வழியில் கோவிலில் வழிபாடு என்ற அறிவிப்புகளை நெஞ்சம் நிறைந்து பாராட்டுகிறேன்.

  பெரிய கோவில்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள சிறிய கோவில்களிலும் சாதியப் பாகுபாடு இல்லாத நிலையை கடைபிடிக்க இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புராணங்களில் உள்ள பண்பாட்டுத் தலைவர்களான மணிமேகலைக்கு காஞ்சிபுரத்தில் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும், மாமன்னர் நந்தனுக்கு சிலை அமைக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு தேசிய ஆணையம் உள்ளது போல் தமிழகத்தில் மாநில ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  Must Read : ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக நயினார் நாகேந்திரன் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

  தமிழக நிதியில் மூன்றில் ஒரு பங்கை பட்டியல் இனத்தவரின் முன்னேற்ற திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறாக பயன்படுத்தும் நிதி குறித்த நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள் அடிக்கடி சேதப் படுத்தப் படுகிறது இனி அது போன்று நடக்காமல் இருக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் துணையை கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகள் அருகே சிசிடிவி கேமரா கொண்டு பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என்று சிந்தனை செல்வன் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: