• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது.

  • Share this:
    தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கர்நாடகாவில் 7 பேர் புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது. கர்நாடகாவில் 7 பேர் புதிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை.

    நானும், மருத்துவத்துறையின் செயலாளர் மற்றும் துறையின் அலுவலர்களோடு மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினோம். தற்போது மத்திய அரசிடம் இருந்து கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் வீதம் மொத்தம் 600 பேர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல், இப்போது புதிதாக 600 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் என்கிற வகையில் 1,450 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, நேற்று 1,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 7 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 112 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 45 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Must Read : கர்நாடகாவில் ஏழு பேருக்கு ஏ.ஒய். 4.2 கொரோனா வைரஸ் பாதிப்பு - எச்சரிக்கைவிடுக்கும் அதிகாரிகள்

    எனினும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய வகை (ஏ.ஒய். 4.2) கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: