• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழக அரசு டெங்குவை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

  • Share this:
    தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், தமிழக அரசு டெங்குவை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர் கொரனா ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

    உலகம் முழுவதும் கொரனா தொற்று பல்வேறு அச்சுருத்தல்களை ஏற்படுத்தி வருவதோடு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர், இதனால் கொரனா தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என்ற என்னம் யாருக்கும் வரகூடாது என்றும், இன்னும் ஓராண்டு காலமாவது  முக கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும்,  மழைகாலம் தொடங்குவதைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தன்னீர் தேங்காமல் சீர் செய்யப்பட்டு வருகிறது.

    Must Read : Ration Card: பெண்களுக்கான குடும்ப அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

    அத்துடன், மருந்துகள் தெளித்து பல்வேறு மழைகால தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: