• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தள்ளிவைக்க வேண்டும் - மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தள்ளிவைக்க வேண்டும் - மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி

தடுப்பூசி

ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் முழுவதுமாக தடுப்பூசி போடுவதை தற்போது இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

  • Share this:
    இந்தியாவில் 3ல் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தள்ளி வைக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிள்ளார்.

    இது குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ‘விரைவில் இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்’ என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருந்து கொண்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் நமக்கே போதுமான அளவு தடுப்பூசி இல்லை. மிழகத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.

    இது இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 6 லட்சம் பேரில் இதுவரை 4 கோடியே 37 லட்சத்து 9 ஆயிரத்து 804 பேர்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி. இதில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் 70 சதவீதம் பேர்.

    அந்தவகையில் 97 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். 2ஆம் தவணையும் சேர்ந்தால் 194 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். இதுவரை இந்தியாவில் 20 கோடி பேர் மட்டுமே 2ஆவது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். ஆக, இந்தியாவில் 3ல் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடப்படுவதற்கு இன்னமும் 115 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும்.

    இந்நிலையில் 12 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதை உலகின் பல்வேறு நாடுகள் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதை நாம் பரிசீலிக்க வேண்டும். இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வோம் என்கிற முடிவு, எந்த வகையில் சரியாக இருக்குமென்று தெரியவில்லை. தமிழக மக்களின் சார்பில் பிரதமரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தடுப்பூசிகள் ஏற்றுமதி என்கிற லட்சியத்தை பின்னர் வைத்துக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் முழுவதுமாக தடுப்பூசி போடுவதை தற்போது இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

    ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையில், ‘நீட்’ தேர்வு அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என கூறியுள்ளார். அதனால்தான் முதலமைச்சர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கவர்னரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.

    Must Read : அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: மருத்துவரை ஆலோசிக்காமல் நேரடியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

    தமிழக மாணவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டும், ஓய்வுபெற்ற நீதிபதியின் சட்ட முன்வடிவை படித்துப் பார்க்கும்போதும் நிச்சயமாக இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார் இவ்வாறு கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: