கடந்த மூன்றே நாட்களில் 3 லட்சம் மதிப்பிலான சுமார் 2700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன், கிருஷ்ணகிரியில் நியூஸ் 18க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
இது குறித்து
மா.சுப்ரமணியன் கூறுகையில், “குட்கா பான்மசாலா போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு சுகாதார துறையும் காவல் துறையும் அந்தந்த உள்ளாட்சி துறை அமைப்புகளுடன் இணைந்து கூட்டத்தை நடத்தினோம் அதனைத் தொடர்ந்து கடந்த மூன்றே நாட்களில் 3 லட்சம் மதிப்பிலான சுமார் 2700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து மொத்த வியாபாரம் செய்து கொண்டிருக்கும் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆங்காங்கே இருக்கும் வியாபாரிகளை உறுதிமொழி ஏற்க சொல்லி இருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் சுகாதாரத் துறையின் சார்பில் பள்ளி வளாகங்கள்,
கல்லூரி வளாகங்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் குட்கா பான்பராக் போன்றவைகளை மனிதனுடைய உடல் அவயங்கள் எந்த அளவுக்கு சீர்கெட்டுப் போகும் சீரழியும் என்பதை விளக்கும் வகையிலும், அதுசம்மந்தமாக உருவ பொம்மைகளாக செய்து ஆங்காங்கே வைத்து அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு மாவட்டத்துக்கு 50 இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
Must Read : Pegasus | செல்போனை ஒட்டுக்கேட்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
நிச்சயமாக 2- 3 மாதங்களில் குட்கா பொருட்கள் விற்பவர்களை தண்டிப்பது, அவர்களை சிறையில் அடைப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது என்பது மட்டுமல்லாமல் அதை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கும் அதன் மூலம் வரக்கூடிய தீங்கை பற்றி உணர்த்தவும் வேண்டும்” என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
மேலும், மாநில எல்லைகளில் அனைத்து வாகனங்களையும் பரிசோதிக்கும் பணிகளை கடந்த 3-4 நாட்களாக தீவிரமாக காவல் துறையினரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி பல்வேறு இடங்களில் சோதனை செய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களில் குட்கா பொருட்களை கடத்துபவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.