ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மெகா தடுப்பூசி முகாமில் 16.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி - மா.சுப்ரமணியன்

மெகா தடுப்பூசி முகாமில் 16.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி - மா.சுப்ரமணியன்

தடுப்பூசி

தடுப்பூசி

100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டாஸ்மாக்கிற்கு மது வாங்க செல்வோர் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்துவோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற 11 மெகா தடுப்பூசி முகாம்களில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. சென்னை அடையாறில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்ற விதி டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும் என்றார்.

Must Read : Omicron  தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

எனவே டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Ma subramanian