• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Vaccination : 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்... தமிழக பாஜக உறுதுணையாக இருக்க வேண்டும் - மா.சுப்பிரமணியன்

Vaccination : 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்... தமிழக பாஜக உறுதுணையாக இருக்க வேண்டும் - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

இன்று மாலைக்குள் தமிழகத்தில் தடுப்பூசி தீர்ந்துவிடும் மத்திய அரசிடமிருந்து பாரபட்சம் இல்லாமல் தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுதர தமிழக பாஜக உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
    மா.சுப்பிரமணியன்செங்கல்பட்டு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா. மோ. அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இது வரை 89 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் இன்று மாலைக்குள் தீர்ந்துவிடும் என்றார்.

    மே மாத இறுதிக்குள் மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஒன்றே முக்கால் லட்சம் தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை பெற தொடர்ந்து முயற்சித்துவரும் நிலையில், தமிழக அரசை குறைசொல்வதை நிறுத்திவிட்டு பாரபட்சம் இல்லாமல் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை பெற்றுதர தமிழக பாஜக உறுதுணையாக நிற்கவேண்டும் என்றும் கூறினார்.

    தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அமைச்சர், பற்றாகுறை காரணமாக 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப் படுவதாகவும் ஜூன் மாத்திற்கான தமிழக தொகுப்பு 42 லட்சம் தடுப்பூசி 6ஆம் தேதிக்கு பிறகு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், செங்கல்பட்டில் படுக்கை தட்டுப்பாடு இல்லை. தொற்றின் அளவும் குறைந்துவருகிறது. மருத்துவர்கள் பற்றாகுறையை போக்க திமுக ஆட்சி பொருப்பேற்ற பிறகு 2,100 மருத்துவவர்கள், 6,000 செவிலியர்கள், 3,700 மருத்துவம் சார்ந்த பணியார்களுக்கான பணியிடங்கள் நிறப்பபட்டிருப்பதாக தெரிவித்தார்.

    செங்கல்ப்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில், 600 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் தயாரிக்கும் கலன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர், 10 நாட்களுக்குள் பணிகள் முழுமையடையும் என்றார்.

    கொரோனாவிற்கு பிறகும், ஆரம்ப சுகாதரநிலையம் வரை அத்தனை நிலை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்படும் என குறிபிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், எத்தனை அலை வந்தாலும் தமிழகம் தயாராக இருப்பதாக கூறினார்.

    Must Read : ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க... உங்கள் கையில்தான் இருக்கு மக்களே : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    அதே போல், இதுவரை தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 12 பேர் நலம் பெற்று வீடு திரும்பியிருப்பதாக கூறிய அமைச்சர், கொரோனா தொற்று பாதிப்பும் செங்கல்பட்டில் குறைந்திருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: