முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜிகா வைரஸால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கும்: தடுக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஜிகா வைரஸால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கும்: தடுக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா சுப்ரமணியன்

மா சுப்ரமணியன்

ஜிகா வைரஸ் பாதிப்பால் சிறிய தலைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், ஜிகா வைரஸ் பரவலை தடுக்க எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு இருப்பதகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

  • Last Updated :

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று காலை நேரில் பார்வையிட்டார். அமைச்சருடன் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி,  சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்விற்கு பின்னர்  வாளையார் அருகே மாவுத்தம்பதி பகுதியில், ஜிகா வைரஸ் பரவல் குறித்தும், கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவது குறித்தும் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் எல்லையோர கிராமங்களில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்த அவர், பின்னர் வாளையார் சோதனை சாவடிக்கு ஆய்விற்கு சென்றார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘அப்போது கொரோனாவைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் புதிது புதிதாக வைரஸ்கள் உருவகின்றது எனவும், டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என்ற பெயரில் புதிய வைரஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தார். ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால், தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள்  சிறிய தலைகளுடன் பிறக்கும் நிலை இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், இதனால் தமிழகத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளையும் பரிசோதனை செய்ய முதல்வர் உத்திரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இன்று வாளையார் எல்லைப் பகுதியில் மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய தெரு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், இது தமிழகம்  முழுவதுக்கான விழிப்புணர்வு பணி எனவும் தெரிவித்தார்.

வீட்டை சுற்றி இருக்கும் நன்னீர்தான் ஏடீஸ் கொசு உற்பத்தி மையம் என தெரிவித்த அவர், ஏடீஸ் கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 14,833 வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றது என தெரிவித்த அவர், கொசுவின் லார்வா நிலையிலேயே நீர் நிலைகளில் மீன்களை வளர்த்து, கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.

மா.சுப்ரமணியன்

இதுவரை தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை எனவும், தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பி்ரமணியம், மாதத்திற்கு 40 முதல் 50  பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், ஐனவரி முதல் இதுவரை 2,800 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மாநில எல்லைகளில் வெப்பமானிகளின் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே கேரளாவில் இருந்து வரும் மக்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். சென்னைக்கு அடுத்தப்படியாக கோவைக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு அதிகம் என தெரிவித்த அவர், 10,97,000 தடுப்பூசிகள் கோவைக்கு  கொடுக்கப்பட்டு இருக்கின்றது எனவும், இதை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், 25 சதவீதம் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குகிறது எனவும், 25 சதவீத மருத்துகளை தனியார் மருத்துவமனைகள் சரியாக பயன்படுத்துவதி்ல்லை எனவும் தெரிவித்தார். கோவை, ஈரோடு, திருப்பூர் உட்பட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறோம் எனவும், இந்த கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் தொகையினை தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கோவையில் முதல் முறையாக இந்த திட்டம் இன்று செயல்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகள் 25 சதவீதம் தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கு முடிவு வரும் எனவும், பல லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக மக்களுக்கு போட முடியும் என தெரிவித்த அவர், எந்தெந்த நிறுவனம் எவ்வளவு தொகை கொடுத்து சி.எஸ்.ஆர் தொகையினை இதற்கு ஒதுக்குகின்றனர் என்பது இன்று தெரிய வரும் எனவும் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கூறுவது தவறு எனவும், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் என கூறிய அவர், எங்கே தனியருக்கு கொடுத்தர்கள் என்பதை ஆதாரபூர்வமாக அவர் சொன்னால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மாலை 7 மணி வரை கோவையில்தான் இருப்போம் எனவும் வானதி சீனிவாசன் நேரில் வந்து சொல்லாம் எனவும் தெரிவித்தார்.

தினந்தோறும் தடுப்பூசி நிலவரங்கள் தெரிவித்து கொண்டு இருக்கின்றோம். மக்கள் பெரிய அளவில் ஊசி போட ஆர்வம் காட்டுகின்றனர் என கூறிய அவர், இன்று 5 லட்சம் தடுப்பூசிகள் வருகின்றது எனவும் தெரிவித்தார்

ஒரு வார காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக இருக்கும் என கூறிய அவர், தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை எனவும், நமக்கு இது வரை 1,80,31,670 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளது எனவும் இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவை எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கன் வழங்குவதில் திமுகவினர் தலையீடு இருந்தால் நாங்களே காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்போம் என கூறிய அவர், தடுப்பூசி போடும் பணியில் தன்னிறைவு அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். அதிமுக அவைதலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும் அப்பலோ  மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்கின்றோம். அவர் நலம்பெற்று வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

First published:

Tags: Corona Vaccine, Ma subramanian, Zika Virus