Home /News /tamil-nadu /

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் திறப்பு: அண்ணாமலை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு டெண்டர் இல்லை

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் திறப்பு: அண்ணாமலை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு டெண்டர் இல்லை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. ஹெல்த் மிக்ஸ், ஆவின் நெய், பேரீட்சை, மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் அரசு மொத்தம் 23.88 லட்சம் ஹெல்த் மிக்ஸ் வாங்குகிறது. அந்த ஹெல்த் மிக்ஸை ஆவின் நிறுவனத்தில் வாங்காமல் தனியார் நிறுவனத்தில் வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

    ஆவின் ஹெல்த் மிக்ஸைவிட தனியார் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் விலை 60 சதவீதம் அதிகமாகும். அதேபோல, அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திலிருந்து இரும்புச் சத்து மருந்துவாங்குவதாலும் அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை, இரும்புச் சத்து மாத்திரையை சந்தை விலையைவிட 37.35 ரூபாய் குறைவாகவும், ஹெல்த் மிக்ஸ் மாவினை 127.50 ரூபாய் குறைவாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது என்று விளக்கம் அளித்தது.

    இந்தநிலையில், ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் எல்1 ஆக வந்துள்ளது. அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்த அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் எல் 2 வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘ஊட்டச்சத்து பெட்டகத்தின் விலை 2018 டெண்டரில் 1996.41 ஆகும். தற்போது  2180.71 ரூபாய் என்பது டெண்டரில் வந்து குறைந்தபட்ச விலையாகும்.

    அதிமுக அலுவலகத்தில் பிக்பாக்கெட் திருடன்... கட்சி தொண்டரிடம் கைவரிசை காட்டியபோது கையும் களவுமாக சிக்கினான்

    கடந்த முறை ஆவின் நெய், ரூ.191.41க்கு கொடுக்கப்பட்டது. தற்போது ரூ 219.50க்கு வழங்கப்படுகிறது. அதையும் கூட குறைத்து கேட்க முயல்வோம். ஆவின் விலை 12.6% சதவீதம் அதிகரித்துள்ளது.
    பெட்டகத்தின் ஒட்டுமொத்த விலை 9.6% அதிகரித்துள்ளது. கடந்த முறைக்கும் தற்போதும் 150 ரூபாய் வித்தியாசம் உள்ளது. எனினும் கூட அந்த நிறுவனத்தினிடம் பேசி விலை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Ma subramanian

    அடுத்த செய்தி