• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை குடிசைப்பகுதிகளில் எவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்? - மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை குடிசைப்பகுதிகளில் எவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்? - மா.சுப்பிரமணியன் விளக்கம்

தடுப்பூசி

தடுப்பூசி

தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக, இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Share this:
    சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்றும், நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டிருப்பதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயபுரம் தங்கசாலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 76.23 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 40.31 சதவீதம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 72 லட்சம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்தும் காத்திருக்கின்றனர். 1 கோடியே 1 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன.

    தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக, இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக முதன்முதலில் வீடுகளை தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டது.

    வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், சமீபத்தில் ‘என்ஐஇ’ என்ற தேசிய நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் 32 சதவீதம் பேருக்கும், நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : தமிழகத்தில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

    குடிசைப் பகுதிகளில் 21 சதவீத மக்கள் மட்டுமே முககவசம் அணிகின்றனர் என்றும், சென்னையில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் 51 சதவீத பேர் முக கவசம் அணிகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முககவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: