Health Minister Ma. Subramanian: தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமனம்.. யார் இவர்?

மா.சுப்ரமணியன்

திமுக வெளியிட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து நாளை முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா தொற்று காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் திமுக-வின் அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், மக்கள், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, சிறப்புத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் ஆகிய துறைகளை தனக்கு ஒதுக்கிறார். அவரைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படுகிறது. நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறையும் ஒதுக்கப்படுகிறது.

    ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். எ.வ.வேலுவுக்கு பொதுப் பணித்துறை ஒதுக்கப்படுகிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    தங்கம் தென்னரசுவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ரெகுபதிக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை எஸ்.முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பெரிய கருப்பனுக்கு கிராமப் புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் மேயராக பணியாற்றியவர் மா.சுப்ரமணியன்.

    சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்ரமணியன் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். சென்னை மேயராக இருந்தபோது இவரது பணி பலரால் பாராட்டப்பட்டது.

    கொரோனா பெறுந்தொற்று காலத்தில் மிகவும் முக்கிய பொறுப்பான சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published: