முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா மரணம்! சி.பி.ஐ விசாரணையை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம்! சி.பி.ஐ விசாரணையை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து. ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை ஏற்பட்ட நேரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மைதான். இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மேல்கட்ட சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று மருத்துவமனை தரப்பு உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.

ஆனால், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால், இந்திய மருத்துவர்களின் பெயர் பாதிக்கப்படும் என்று கூறி மறுத்துவிட்டார். ராதாகிருஷ்ணனின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சர்ச்சையைக் கிளப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாக முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உண்மைத் தெரியவரும். ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து. ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை ஏற்பட்ட நேரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 4-ந்தேதி யார் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி அன்று மாலையில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கிறோம். வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் வரவுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published:

Tags: Jayalalithaa, MK Stalin